திமுக சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: தலைமை கழகம் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திமுக சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் சென்னையில் தலைமை செயலகம், விமானநிலையம், ரயில்நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் கொடியேற்றப்படுகிறது.

அதைப்போன்று திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் திமுக தலைமை அலுவலகமான தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. நாளை காலை 8 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கொடியேற்றுகிறார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.


.

மூலக்கதை