அத்திவரதர் தரிசனத்திற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
அத்திவரதர் தரிசனத்திற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க உத்தரவிட முடியாது  சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை : காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்கக் கோரி ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சபா தலைவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது பற்றி அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்த நிலையில், மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். முன்னதாக காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் அறநிலையத் துறை அமைச்சர் பதில் அளித்தார்.

மூலக்கதை