நாடாளுமன்றத்தை அழகாக்கும் விதத்தில் புதிதாக மின்விளக்கு அலங்காரம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

தினகரன்  தினகரன்
நாடாளுமன்றத்தை அழகாக்கும் விதத்தில் புதிதாக மின்விளக்கு அலங்காரம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

டெல்லி: நாடாளுமன்றத்தை அழகாக்கும் விதத்தில் புதிதாக மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றிலும் 875 LED விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் நொடிக்கு ஒருமுறை ஒவ்வொறு நிறத்தில் வெளிச்சம் பாய்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய விளக்கு அலங்காரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இது குறித்து நாடாளுமன்ற செயலாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இரவு நேரத்தில் நாடாளுமன்ற கட்டிடத்தை வண்ண நிற அலங்காரத்தில் பொதுமக்கள் பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிற விளக்குகளை காட்டிலும், 5 மடங்கு குறைவாக மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தும் LED விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விளக்கு அலங்காரத்தின் மூலம் நாடாளுமன்ற கட்டிடத்தின் தோற்றம் மேலும் அழகாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அமைச்சக கட்டிடங்களுக்கு இதேபோல் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை