அத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த்

தினமலர்  தினமலர்
அத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் நடக்கிறது. இக்கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு, ஜூலை 1 முதல் 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. தினசரி லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.

ஆக.,17ம் தேதி கோவில் குளத்துக்குள் அத்திவரதர் சிலை மீண்டும் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் பலரும் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். சயன கோலத்தில் அத்திரவரதர் இருந்த போது ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா உள்ளிட்ட குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதாவுடன் அத்திவரதரை தரிசித்தார். சுவாமிக்கு பட்டாடை, மாலை ரஜினி சார்பில் வழங்கப்பட்டது. கோவில் அர்ச்சர்கள் அத்திரவதர் சிறப்புகள் பற்றி ரஜினிக்கு விளக்கினர்.

மூலக்கதை