விஜய் மோதிரம் - மகிழ்ச்சியில் நடிகைகள்

தினமலர்  தினமலர்
விஜய் மோதிரம்  மகிழ்ச்சியில் நடிகைகள்

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்றுடன் படமாக்கப்பட்டு விட்டன. படத்தில் பணியாற்றியவர்களுக்கு விஜய் மோதிரம் பரிசளித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மோதிரத்தில் பிகில் என அச்சிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் சுமார் 400 பேரை வரை பணியாற்றுகிறார்களாம். அவர்கள் அனைவருக்குமே விஜய் மோதிரம் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. அவரது அன்புப் பரிசால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்களாம்.

அந்த மகிழ்ச்சியை உடனடியாகப் பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரெபா மோனிக்கா ஜான். “என் வாழ்க்கையில் முக்கிய ஞாபகமாக இது இருக்கும். விஜய்க்கு நன்றி. பிகில் படம் எனக்கு மிகப் பெரும் அனுபவத்தைக் கொடுத்த படம்,” என அவர் டுவிட்டரில் மோதிர புகைப்படத்தைப் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேப்போன்று நடிகைகள் வர்ஷா பொல்லாம்மா, காயத்ரி ரெட்டி உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை