‛கோமாளி' கதை திருட்டு பிரச்னை: ‛சர்கார்' பாணியில் தீர்வு

தினமலர்  தினமலர்
‛கோமாளி கதை திருட்டு பிரச்னை: ‛சர்கார் பாணியில் தீர்வு

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்துள்ள படம் ‛கோமாளி'. நாளை(ஆக.,15) வெளிவரும் இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தின் கதை என்னுடையது என்று பார்த்திபனின் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தார்.

சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட குழுவினர் இரண்டு கதைகளையும் ஒப்பிட்டு பார்த்து இது உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கதைதான் என்பதை உறுதி செய்தனர். இதனால் படத்தில் கிருஷ்ண மூர்த்தியின் பெயரை போட கோமாளி இயக்குனர் பிரதீப்பும், தயாரிப்பாளர் ஐசரி கணேசும் ஒப்புக் கொண்டனர்.

இதனால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. கிருஷ்ணமூர்த்திக்கு நஷ்ட ஈடாக பணம் எதுவும் கொடுக்கப்பட்டதா என்பது குறித்த தகவலை எழுத்தாளர் சங்கம் வெளியிடவில்லை.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படமும் கதை திருட்டு பிரச்னையில் சிக்கிய போது இதேப்போன்றதொரு தீர்வே கிடைத்தது.

மூலக்கதை