குருஷேத்ரம் நமது கலாச்சரத்தை சொல்லும்: அர்ஜூன்

தினமலர்  தினமலர்
குருஷேத்ரம் நமது கலாச்சரத்தை சொல்லும்: அர்ஜூன்

மகாபாரதத்தில் வரும் குருஷேத்ர யுத்தத்தை மையமாக வைத்து கன்னடத்தில் வெளிவந்த படம் குருஷேத்ரா. முதன் முதலாக 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புராணப்படம். இந்தப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நாளை(ஆக.,15) வெளிவருகிறது. நாகன்னா இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனாக தர்ஷன், கர்ணாக அர்ஜுன், கிருஷ்ணராக வி.ரவிச்சந்தர், அர்ஜுணனாக சோனு சூட், சகுனியாக ரவி ஷங்கர், திரவுபதியாக சினேகா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார். ஜெய் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு அர்ஜூன் பேசியதாவது: இந்தப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. நான் விரும்பிய பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். அஜித்தின் 50வது படத்தில் நான் இருந்தது போல், தர்ஷனின் 50வது படத்திலும் நடித்துள்ளேன். இப்படத்தில் நான் நடித்ததை விட வெற்றி பெற்ற படத்தில் நான் இருந்தது பெருமை.

கனல் கண்ணனின் சண்டைப்பயிற்சி முலம் கிளைமாக்ஸில் நடக்கும் சண்டை வியக்கத்தக்க அளவில் வந்துள்ளது. இந்தப்படம் வளரும் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம், ஏனெனில் இது நம் கலாச்சாரத்தை விவரிக்கும் படம் என்றார்.

மூலக்கதை