2.0 - சீனாவில் செப்டம்பர் 6 ரிலீஸ்

தினமலர்  தினமலர்
2.0  சீனாவில் செப்டம்பர் 6 ரிலீஸ்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம் கடந்த வருடம் வெளிவந்தது. மிகப் பெரும் வெற்றியையும், வசூலையும் பெறாமல் கொஞ்சம் தள்ளாடியது. ஹிந்தியில் மட்டுமே சூப்பர் வசூலை தந்தது.

சீனாவில் படத்தை வெளியிட்டு, அங்கு வசூலித்தால் மட்டுமே படத் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என்று அப்போதே சொன்னார்கள். கடந்த மே மாதம் சீனாவில் வெளியிட திட்டமிட்டு, பின்னர் அதை ஜுலை 12க்கு தள்ளி வைத்தார்கள். ஆனால், 'தி லயன் கிங்' படம் வெளியானதால் கடந்த மாதமும் பட வெளியீட்டை எந்த அறிவிப்பும் இல்லாமல் மீண்டும் தள்ளி வைத்தார்கள்.

இப்போது செப்டம்பர் 6ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். 47 ஆயிரம் 3டி திரைகளையும் சேர்த்து மொத்தமாக 56000 திரைகளில் படத்தை வெளியிட உள்ளார்கள். சீனாவில் 2.0 வசூல் சாதனை புரியுமா என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மூலக்கதை