கிண்டல் பதிவிட்டவர்களுக்கு நித்யா மேனன் பதிலடி

தினமலர்  தினமலர்
கிண்டல் பதிவிட்டவர்களுக்கு நித்யா மேனன் பதிலடி

கனமழை காரணமாக கேரளா மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனிடையே, 'மிஷன் மங்கள்' படத்திற்காக பிரமோஷன் நிகழ்ச்சியில் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நித்யாமேனனும் கலந்து கொண்டு வருகிறார்.

கேரள மழை பாதிப்புகளுக்காக எந்த உதவியும் செய்யாமல் பட பிரமோஷனில் கலந்து கொள்வது குறித்து பலரும் அவரைக் கிண்டலடித்து பதிவிட்டிருந்தார்கள். அவர்களுக்கு ஒரு வீடியோ பதிவு மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் நித்யா மேனன்.

“சோஷியல் மீடியாவில் எதைப் போட வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதில் பதிவிட்டால்தான் நாம் உதவி செய்வதாக அர்த்தம் இல்லை. ஒருவர் என்ன செய்கிறார் என்பதை அவரது சோஷியல் மீடியா பதிவை வைத்து கணிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மிஷன் மங்கள் படத்தில் நான் நடித்திருக்கிறேன். அதற்காக பட பிரமோஷனில் கலந்து கொள்வது அவசியம்.

முதலில் ஒருவரை நோக்கி உங்கள் விரலை உயர்த்துவதற்கு முன்பு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அதன்பின் அடுத்தவரைப் பற்றிக் குறை சொல்லுங்கள்,” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

மூலக்கதை