'சைரா' பட விழாவில் ரஜினிகாந்த் ?

தினமலர்  தினமலர்
சைரா பட விழாவில் ரஜினிகாந்த் ?

சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப் மற்றும் பலர் நடிக்க சுமார் 250 கோடி ரூபாய் செலவில் 'சை ரா' படம் உருவாகி உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரான சைரா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில் சைரா-வாக சிரஞ்சீவி நடிக்கிறார்.

படப்பிடிப்பு முடிவடைந்து அக்டோபர் மாதம் வெளியீட்டிற்குத் தயாராக இருக்கும் இப்படத்தின் வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹிந்தியில் 'பாகுபலி' படங்களை வாங்கி வெளியிட்ட ஏஏ ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் இப்படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமையைக் கொடுத்திருக்கிறார்கள். மற்ற மொழிகளுக்கான வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழிலும் வெளியாகும் இப்படத்தின் அறிமுக விழாவை சென்னையிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம். அதற்காக ரஜினிகாந்த்திடம் தேதி கேட்டுள்ளார்களாம். அவர் அறிமுகம் செய்தால் படத்திற்கு தனி கவனம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு படக்குழுவிடம் உள்ளது.

தன் நீண்ட நாளைய நண்பரான சிரஞ்சீவிக்காக ரஜினிகாந்த் நிச்சயம் கலந்து கொள்வார் என்கிறார்கள்.

மூலக்கதை