வில்லன் ஆனார் ‛ஜித்தன்' ரமேஷ்

தினமலர்  தினமலர்
வில்லன் ஆனார் ‛ஜித்தன் ரமேஷ்

பிரபல தயாரிப்பளர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் மகன் ரமேஷ். நடிகர் ஜீவாவின் அண்ணன். ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெற்றதால் ஜித்தன் ரமேஷ் ஆனார். ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த மதுரை வீரன், புலி வருது, நீ வேணுண்டா செல்லாம். பிள்ளையார் கோவில் தெரு கடைசி வீடு படங்கள் வெற்றி பெறவில்லை. கடைசியாக அவர் நடித்து வெளிவந்த படம் ஜித்தன் 2. அதுவும் வெற்றி பெறவில்லை. இதனால் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த ரமேஷ் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதில் ஹீரோவாக தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகர் சாய் நடிக்கிறர், மேற்கு வங்கத்தை சேர்ந்த ஈனா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். ரவி ஒளிப்பதிவு செய்கிறார். ஆனந்த இசை அமைக்கிறார். வம்சி கிருஷ்ணா மல்லா இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.

மூலக்கதை