மகாராஷ்டிர வெள்ள நிவாரணம்: ஜெனிலியா ரூ.25 லட்சம் நிதி

தினமலர்  தினமலர்
மகாராஷ்டிர வெள்ள நிவாரணம்: ஜெனிலியா ரூ.25 லட்சம் நிதி

‛பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா. அதன் பிறகு ‛சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம்' படங்களில் நடித்தார். இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் இணைந்து படம் தயாரிக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தாராள நிதி வழங்குமாறு அந்த மாநில முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். பாலிவுட் நட்சத்திரங்கள் நிதி வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜெனிலியாவும், அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் ரூ.25 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். இந்த புகைப்படத்தை தனது முதல்வர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை