பிகில் - அப்டேட் என்ன?

தினமலர்  தினமலர்
பிகில்  அப்டேட் என்ன?

அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிக்கும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை நெருங்கி உள்ளது. அப்படத்தில் இடம் பெற்ற 'சிங்கப்பெண்ணே' இணையத்தில் லீக்கானதைத் தொடர்ந்து அந்த ஒரு பாடல் மட்டும் உடனடியாக வெளியிடப்பட்டது.

அதன்பின் படத்தைப் பற்றிய எந்தத் தகவலையும் படக்குழு தெரிவிக்கவில்லை. அது பற்றி அடிக்கடி தெரிவிக்க வேண்டும் என படத் தயாரிப்பு நிறுவனத்திடம் விஜய் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்தனர். விஜய் அளித்த மோதிரப் பரிசு பற்றித் தகவல் வெளி வந்து விஜய் ரசிகர்களை வியக்க வைத்தது. சுமார் 400 பேருக்கு விஜய் மோதிரத்தை பரிசளித்துள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி 'பிகில்' பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். “நாங்கள் திட்டமிட்டபடியே கடைசி கட்டத்தில் உள்ளோம். படத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பமாகி இறுதிக்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 95 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அப்டேட்டை வழங்காமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவே விரும்புகிறோம். ஆனால், அதற்கு உரிய நேரம் தேவை” எனத் தெரிவித்துளளார்.

மூலக்கதை