ஐ.சி.யு.,வில் ஜெட்லி தொடர்ந்து தீவிர சிகிச்சை

தினமலர்  தினமலர்
ஐ.சி.யு.,வில் ஜெட்லி தொடர்ந்து தீவிர சிகிச்சை

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, முந்தைய அரசில், நிதி மற்றும் ராணுவ அமைச்சராக இருந்தவர், பா.ஜ., மூத்த தலைவர், அருண் ஜெட்லி. கடந்தாண்டு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக, அவர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.உடல்நலம் காரணமாக, இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இந்நிலையில், மூச்சுத் திணறல் மற்றும் உடல் சோர்வு காரணமாக, கடந்த, 9ம் தேதி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., மூத்த தலைவர்கள், மருத்துவமனை சென்று உடல்நலம் விசாரித்தனர்.எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், 'அருண் ஜெட்லிக்கு, ஐ.சி.யு.,வில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரின் இருதயம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக உள்ளது' என, கூறப்பட்டுள்ளது.


மூலக்கதை