வெள்ள சேதம் எவ்வளவு? துணை முதல்வர் விசாரணை

தினமலர்  தினமலர்
வெள்ள சேதம் எவ்வளவு? துணை முதல்வர் விசாரணை

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் குறித்து, தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், கோவை வடக்கு ஆர்.டி.ஓ.,விடம் விபரங்களை கேட்டறிந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால், பில்லுார் அணை நிரம்பியது. அணைக்கு வருகின்ற உபரி நீரை திறந்ததில், பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஐந்து வீடுகள் இடிந்தன. வீடுகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள், 130 பேரை வருவாய்த்துறையினர் மேட்டுப்பாளையம், சிறுமுகையில் உள்ள ஐந்து மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர். நிவாரண பொருட்களையும் வழங்கினர்.
நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, நிவாரணப் பொருள் வழங்க, தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் மேட்டுப்பாளையம் வழியாக, ஊட்டி சென்றார். அப்போது, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ், மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி ஆகியோரிடம், மேட்டுப்பாளையத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

மூலக்கதை