தலைமை நீதிபதி பேச்சு அரசியல் சாயமற்ற வழக்கில் சிபிஐ சூப்பர்: விசாரணைகள் குறித்து மறைமுக குட்டு

தினகரன்  தினகரன்
தலைமை நீதிபதி பேச்சு அரசியல் சாயமற்ற வழக்கில் சிபிஐ சூப்பர்: விசாரணைகள் குறித்து மறைமுக குட்டு

புதுடெல்லி: ‘‘அரசியல் சாயமில்லாத வழக்குகளில் மட்டும் சிபிஐ சிறப்பாக செயல்படுவது ஏன்?’’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பி உள்ளார்.சிபிஐ சார்பில் 18வது டி.பி.கோஹ்லி நினைவு சொற்பொழிவு, 2 ஆண்டு இடைவெளிக்குப் பின் டெல்லியில் நேற்று நடத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசுகையில்,  சிபிஐயின் குறைகள் குறித்தோ, பலம் குறித்தோ எதுவும் கூறவில்லை. அதேசமயம் பல்வேறு அறிவுரைகளைஅவர் வழங்கினார்.அவர் பேசுகையில், ‘‘அதிகாரம் மிக்கவர்கள், அரசியல் பின்புலம் கொண்டவர்களின் வழக்குகளில், சிபிஐ விசாரணையானது நீதித்துறை ஆய்வின் தரத்தை எட்டுவதில்லை என்பது உண்மை. இதுபோன்ற குறைபாடுகள் மீண்டும் மீண்டும் நடக்கக்  கூடாது என்பது அவசியம். இவை சிபிஐ.யின் நம்பிக்கையையும், கட்டமைப்பையும் பாதித்து விடும்.  அரசியல் சாயமில்லாத வழக்குகளில் மட்டும் சிபிஐ.யால் சிறப்பாக செயல்பட முடிவது ஏன்?’’ என கேள்வி எழுப்பினார்.

மூலக்கதை