தொடர்ந்து 9வது மாதமாக கார், பைக் விற்பனை சரிவு

தினகரன்  தினகரன்
தொடர்ந்து 9வது மாதமாக கார், பைக் விற்பனை சரிவு

புதுடெல்லி: நாட்டில் பொருளாதார நிலை மந்தநிலை காரணமாக, பயணிகள் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து 9வது மாதமாக ஜூலையில் 30.98 சதவீதமாக 2,00,790 வாகனங்கள் விற்பனையானது. கடந்த ஆண்டில் இதே மாதத்தில்  மொத்தம் 2,90,931 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இதேபோல், கார் விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் குறைந்துள்ளது. கடந்த ஜூலையில் கார் விற்பனை 35.95 சதவீதமாக குறைந்து 1,22,956 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மொத்தம் 1,91,979  கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்துள்ளன. நாட்டில் பொருளாதார நிலை வளர்ச்சி பெறாமல் மந்த நிலையில் உள்ளதால், மக்களிடம் வாங்கும் சக்தி  குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் ஆட்டோமொலை தொழிலில் வேலை இழப்பு தொங்கி தொழில் பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.மோட்டார் சைக்கிள் விற்பனை கடந்த மாதம் 18.88 சதவீதமாக குறைந்து மொத்தம் 9,33,996 விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மொத்தம் 11,51,324 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.கடந்த ஜூலை மாதம் மொத்த இரு சக்கர வாகனங்கள் விற்பனை 16.82 சதவீதமாக சரிந்து 15,11,692 வாகனங்கள் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மொத்த இரு சக்கர வாகனங்கள் விற்பனை 18,17,406  வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதேபோல், வர்த்தக வாகனங்கள் விற்பனையும் சரிந்துள்ளது. கடந்த மாதம் விற்பனை 25.71 சதவீதமாக சரிந்து மொத்தம் 56,866 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே  மாதத்தில் மொத்தம் 76,545 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன.* உள்நாட்டில் கார்கள் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஜூலையில் கார்கள் விற்பனை 35.95 சதவீதமாக (1,22,956) குறைந்தது. கடந்த 2018ல் இதே மாதத்தில் 1,91,979 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.* இதேபோல், மோட்டார் சைக்கிள் (பைக்) விற்பனை கடந்த மாதம் 18.88 சதவீதமாக குறைந்தது. அதாவது 9,33,996 பைக்குகள் விற்பனையானது. கடந்த 2018ல் இதே மாதத்தில் மொத்தம் 11,51,324 பைக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை