தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.408 குறைவு

தினகரன்  தினகரன்
தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.408 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3576-க்கும், சவரன் ரூ.28,608-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.60 குறைந்து ரூ.47.40-க்கும் விற்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 34 டாலர் குறைந்து 1498 டாலராக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 3.627-க்கும், சவரன் ரூ.29,016-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சர்வதேச சந்தையில் ஒரே வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 67 டாலர் அதிகரித்து 1529 டாலராக உயர்ந்தது. மேலும் இன்று ஒரே நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.192 உயர்ந்திருந்தது. மேலும் ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை 29 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்த்த நிலையில் இன்று சவரகனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை