மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் தொடரும் பலத்த மழையால் பெரும் வெள்ளம்

தினகரன்  தினகரன்
மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் தொடரும் பலத்த மழையால் பெரும் வெள்ளம்

சாகர்: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தொடரும் பலத்த மழையால் பல ஊர்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் தாரி கிராமம் உள்பட பல ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கரில் கேலோ நதியில் அபாயக் கட்டத்துக்கு மேல் வெள்ளம் பாய்கிறது. கேலோ நதி வெள்ளம் ஊருக்குள் பாய்ந்ததால் ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

மூலக்கதை