ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை : சென்னையில் 500 புதிய அரசு பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் சுமார் ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் பழனிசாமி  தொடங்கி வைத்தார். இதில் 15 பேருந்துகள் கிளாசிக் எனப்படும் கழிவறை வசதி கொண்டவை. போக்குவரத்து கழகங்கள் வாரியாக சென்னை 235, விரைவு போக்குவரத்து கழகம் - 118, விழுப்புரம் -18, சேலம் - 60, கோவை - 16, கும்பகோணம் - 25, மதுரை - 14, நெல்லை - 14 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை