அணு ஆயுத சோதனைக்காக 17 நாடுகள் மீது வடகொரியா சைபர் தாக்குதல்: ஐ.நா. குற்றசாட்டு

தினகரன்  தினகரன்
அணு ஆயுத சோதனைக்காக 17 நாடுகள் மீது வடகொரியா சைபர் தாக்குதல்: ஐ.நா. குற்றசாட்டு

அமெரிக்கா: அணு ஆயுத சோதனைக்காக 17 நாடுகள் மீது வடகொரியா சைபர் தாக்குதல் நடத்தி சுமார் ரூ. 14,000 கோடி திருடியதாக கூறப்படும் குற்றசாட்டுக் குறித்து ஐ.நா. விசாரணையை முடக்கிவிட்டுள்ளது. இது தொடர்பாக அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் அணு ஆயுத திட்டத்திற்காக வடகொரியா சைபர் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.  வடகொரியா சைபர் ஹேக்கர்கள் நிதி நிறுவனங்கள் மற்றும் பிட் காயின்கள் பரிமாற்றம் மூலம் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 14,237 கோடியே திருடபட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதில் தென்கொரியா மட்டும் 10 சைபர் தாக்குதாள்களை எதிர்க்கொண்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து இந்தியா 3 முறை நடந்த சைபர் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நாடுகள் மீது வடகொரியா நடத்திய இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் மூன்று வகையிலான சைபர் தாக்குதல்ககளை ஹேக்கர்கள் நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக 50% எனப்படும் வங்கிகளுக்கு இடையிலான பணப்பரிமாற்றம் மூலம் இந்த திருட்டு நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. வங்கி ஊழியரின் கணினிகளை ஹேக் செய்து பணமோசடி செய்துள்ளதாகவும்  கூறப்படுகிறது. பிட் காயின் ஹேக்கர்கள் இருவகை மோசடி செய்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

மூலக்கதை