கங்குலி, மியாண்டட் ஆகியோர் குவித்த ரன்கள் ஒரே நாளில் 2 சாதனையும் முறியடிப்பு: விராட் கோஹ்லிக்கு பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கங்குலி, மியாண்டட் ஆகியோர் குவித்த ரன்கள் ஒரே நாளில் 2 சாதனையும் முறியடிப்பு: விராட் கோஹ்லிக்கு பாராட்டு

போர்ட் ஆப் ஸ்பெயின்: விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைப்பெற்றது. முன்னதாக முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவலில் நடைபெற்றது.

இப்போட்டியின் முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆட்டமிழந்த பின்னர் இந்திய கேப்டன் களத்தில் இறங்கினார்.

கேப்டன் விராட் கோஹ்லியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோஹ்லி 112 பந்துகளில் தனது 42வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கங்குலியின் (11,363 ரன்கள்) சாதனையினை கோஹ்லி (11406 ரன்கள்) முறியடித்துள்ளார்.

குயின்ஸ் பார்க் ஓவலில் நேற்று நடைப்பெற்ற ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுக்கு எதிராக அதிர ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றார்.

இவர் 19வது ரன் எடுத்த போது இந்த பெருமையினை பெற்றார். பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டத்தின் இச்சாதனையை பெற்றிருந்தார்.

இவர், 64 இன்னிங்சில் 1,930 ரன்கள் குவித்திருந்தார். இந்திய வீரர் கோஹ்லி 34 இன்னிங்ஸ்களில் மியாண்டட் சாதனையை விஞ்சியுள்ளார்.

ஒரே நாளில், ஒருநாள் பேட்டியில் கங்குலியின் சாதனை  மற்றும் மேற்கிந்திய அணிக்கு எதிரான மியாண்டட் ஆகியோரின் சாதனையை விராட் கோஹ்லி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோஹ்லியின் சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

.

மூலக்கதை