சின்சினாட்டி ஓபன் ஷரபோவா முன்னேற்றம்

தினகரன்  தினகரன்
சின்சினாட்டி ஓபன் ஷரபோவா முன்னேற்றம்

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ரஷ்யாவின் மரியா ஷரபோவா தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் அமெரிக்காவின் அலிசான் ரிஸ்கியுடன் மோதிய ஷரபோவா 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை எளிதாகக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் அலிசான் ரிஸ்கி கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. இதில் ஷரபோவா 7-6 (7-4) என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 55 நிமிடத்துக்கு நீடித்தது. இந்த தொடரில் ஷரபோவா ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதி பெற்று களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை