டிஎன்பிஎல் குவாலிபயர்-2: மதுரைக்கு 176 ரன் இலக்கு

தினகரன்  தினகரன்
டிஎன்பிஎல் குவாலிபயர்2: மதுரைக்கு 176 ரன் இலக்கு

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி20 தொடரின் 2வது குவாலிபயர் ஆட்டத்தில், மதுரை பேந்தர்ஸ் அணிக்கு 176 ரன் இலக்கை திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயித்தது. என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன் குவித்தது.  தொடக்க வீரர்கள் ஹரி நிஷாந்த் 51 ரன் (46 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஜெகதீசன் 50 ரன் (48 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய சதுர்வேத் 35 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுக்க, சுமந்த் ஜெயின், ஆதித்யா அருண் டக் அவுட்டாகினர். முகமது 32 ரன்னுடன் (9 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். மதுரை பேந்தர்ஸ் பந்துவீச்சில் கிரண் ஆகாஷ் 2, தன்வர், ஷா, கோகேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் களமிறங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள பைனலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை சந்திக்கும்.

மூலக்கதை