சென்னையின் எப்சி கேப்டன் மெயில்சன் விடை பெறுகிறார்

தினகரன்  தினகரன்
சென்னையின் எப்சி கேப்டன் மெயில்சன் விடை பெறுகிறார்

சென்னை: ஐஎஸ்எல் தொடரில் விளையாடும் சென்னையின் எப்சி  கால்பந்து அணி கேப்டன் மெயில்சன் அல்வேஸ் அந்த அணியில் இருந்து விலகுகிறார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த  மெயில்சன் கடந்த 3 சீசன்களாக சென்னையின் எப்சி அணியில் இடம் பெற்றிருந்தார். இதுவரை சென்னை அணிக்காக 56 போட்டிகளில் விளையாடி 8 கோல் அடித்துள்ளார். 2017-18ம் ஆண்டு ஐஎஸ்எல் தொடர் இறுதிப் போட்டியில் பெங்களூர் எப்சிக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் சென்னை அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர். அந்த போட்டியில் அவர் 2 கோல் அடித்தார். 2018-19 தொடரில் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு 2015 சீசனில் சென்னை அணிக்காக விளையாடினார். இடையில் 2016ம் ஆண்டு நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணிக்காக விளையாடி உள்ளார்.இந்நிலையில் சென்னையின் எப்சி அணி நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சென்னையின் எப்சி அணிக்காக வாழ்ந்தவர், சுவாசித்தவர் மெயில்சன். ஐஎஸ்எல் இறுதிப் போட்டியில் வெற்றிக்கு காரணமாக அமைந்த அவரது கோல்களை மறக்க முடியாது. கால்பந்து களத்தில் தொடர்ந்து சாதிக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அணியின் வீரர்கள், அலுவலர்கள் சார்பில் நன்றி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை