ஆஷஸ் 2வது டெஸ்ட் லார்ட்சில் இன்று தொடக்கம்

தினகரன்  தினகரன்
ஆஷஸ் 2வது டெஸ்ட் லார்ட்சில் இன்று தொடக்கம்

லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் 2வது போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மோதுகிறது பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி 251 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றதுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 24 புள்ளிகளை தட்டிச் சென்றது.இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸி. அணியில் ஸ்மித், வேடு, கவாஜா, பெய்ன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். தொடக்க வீரர்கள் வார்னர், பேங்க்ராப்ட் கணிசமாக ரன் குவித்தால் அந்த அணி பெரிய ஸ்கோரை எட்ட முடியும். பந்துவீச்சிலும் கம்மின்ஸ், சிடில், லயன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பேட்டின்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் ஹேசல்வுட், ஸ்டார்க் வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், ரூட், ஸ்டோக்ஸ், வோக்ஸ் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்தாலும், நாதன் லயன் சுழலை சமாளிக்க முடியாமல் திணறியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. காயம் காரணமாக ஆண்டர்சன் விலகிய நிலையில், இளம் வேகம் ஜோப்ரா ஆர்ச்சர் நம்பிக்கை அளிக்கிறார். வெற்றியை தொடர ஆஸ்திரேலியாவும், பதிலடி கொடுக்க இங்கிலாந்தும் வரிந்துகட்டுவதால், இப்போட்டி மிகவும் சுவாரசியமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

மூலக்கதை