கலைமாமணி விருது பெற்ற கார்த்தி, யுவன் உள்ளிட்ட 201 பேர்

தினமலர்  தினமலர்
கலைமாமணி விருது பெற்ற கார்த்தி, யுவன் உள்ளிட்ட 201 பேர்

கலைத்துறையில் சாதனை படைத்த 201 கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. 2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பெயர் பட்டியலை பிப்ரவரி மாதம் வெளியிட்டது தமிழக அரசு.

இந்தக்காலக்கட்டத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரசன்னா, பொன்வண்ணன், பிரபு தேவா, சரவணன், ராஜசேகர், ஆர்.ராஜிவ், பாண்டு, ஆர்.பாண்டியராஜன், சசிகுமார், சித்ரா லட்சுமணன், ஸ்ரீகாந்த், சந்தானம், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமயைா, சிங்கமுத்து, பிரியாமணி, குட்டி பத்மினி, நளினி, குமாரி காஞ்சனா தேவி, பழம் பெரும் நடிகை பி.ஆர்.வரலட்சுமி, சாரதா, ராஜஸ்ரீ, புலியூர் சரோஜா, நளினி, நிர்மலா பெரியசாமி, இயக்குனர்கள் ஹரி, டி.பி.கஜேந்திரன், சுரேஷ்கிருஷ்ணா, பவித்ரன், பாடகர்கள் கானா பாலா, கானா உலகநாதன், பரவை முனியம்மா, வேல்முருகன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் விருதுக்கு தேர்வாகினர்.

இந்த விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று(ஆக.,13) நடந்தது. மேற்சொன்ன பல கலைஞர்களும் இந்த விழாவில் பங்கேற்று கலைமாமணி விருது பெற்றனர்.

விஜய் சேதுபதி, பிரியாமணி, பிரபுதேவா உள்ளிட்ட சில கலைஞர்கள் வரவில்லை. அவர்கள் சார்பில் வேறொருவர் பெற்றனர்.

மூலக்கதை