மோடி ஹூஸ்டன் நிகழ்ச்சி; 40 ஆயிரம் பேர் பதிவு

தினமலர்  தினமலர்
மோடி ஹூஸ்டன் நிகழ்ச்சி; 40 ஆயிரம் பேர் பதிவு

ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், செப். 22ல், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே, பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு, இதுவரை, 40 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.


ஐ.நா., சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா செல்கிறார். அந்தப் பயணத்தின்போது, செப். 22ல், ஹூஸ்டன் நகரில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாட்டை, டெக்சாஸைச் சேர்ந்த இந்தியர்கள் அமைப்பு செய்து வருகிறது.

'ஹவ்டி மோடி' என்ற பெயரில், ஹூஸ்டனில் உள்ள பிரமாண்ட கால்பந்து மைதானத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அதே நேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்போர், தங்களுடைய பெயர்களை பதிவு செய்து, 'பாஸ்' பெற வேண்டும். இதுவரை, 40 ஆயிரம் பேர் தங்களுடைய பெயரை முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் எதிர்பர்க்கின்றனர்.


இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் ஒன்றான, ஹூஸ்டனில் மட்டும், ஐந்து லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இதற்கு முன், 2014ல் நியூயார்க் மேடிசன் சதுக்கத்திலும், 2016ல் சிலிக்கான் வேலியிலும், அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்புகள் நடந்துள்ளன.

மூலக்கதை