தமிழில் வெளிவருகிறது மிஷன் மங்கல்

தினமலர்  தினமலர்
தமிழில் வெளிவருகிறது மிஷன் மங்கல்

அக்ஷய் குமார், வித்யாபாலன், சோனாக்ஷி சின்ஹா, நித்யா மேனன், டாப்சி உள்பட பலர் நடித்துள்ள படம் மிஷன் மங்கல். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கேப் ஆப் குட் பிலிம்ஸ் மற்றும் ஹோப் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்தப் படம், செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் மேற்கொண்ட சாகசக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

அமித் திரிவேதி இசை அமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக இயக்குனர் ஜெகன் சக்தி இயக்கி உள்ளார். இந்தியில் தயாராகி உள்ள இந்தப் படம் தமிழிலும் வெளிவருகிறது. இதுகுறித்து இயக்குனர் ஜெகன் சக்தி கூறியதாவது:

என் சகோதரி சுஜாதா இஸ்ரோவில் பணிபுரிகிறார், எனவே மங்கல்யான் மிஷன் குழுவுடன் விரிவான நேர்காணல்களைச் செய்ய முடிந்தது. இந்தப் படத்திற்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதில் இஸ்ரோ மிகவும் உதவியாக இருந்தது. மறுபுறம் கலை இயக்குனர் மற்றும் வி.எப்.எக்ஸ் குழு, படத்தின் மிக முக்கியமான அங்கமாக இருந்த ராக்கெட்டை வடிவமைக்க எங்களுக்கு உதவினர்.

நாங்கள் இஸ்ரோவின் வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த ஆர்வமாக இருந்தோம், ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களால் அதை அனுமதிக்க முடியவில்லை. நடைமுறை வாழ்க்கையில் எளிமையாக வாழும் சாதாரண ஆண்களும் பெண்களும் எப்படி அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள் என்பது பற்றிய கதை இது. இந்த மிஷன் மங்கல் படம் இஸ்ரோ வெற்றி கண்ட மங்கல்யான் பற்றியது, இந்த பணி ஒரு கூட்டு வெற்றியாகும், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. ஹிந்தி மொழியில் வெளிவர இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது . என்றார்.

மூலக்கதை