குடிபோதையில் நடிகைக்கு அடி-உதை; கைதான நடிகர்

தினமலர்  தினமலர்
குடிபோதையில் நடிகைக்கு அடிஉதை; கைதான நடிகர்

குடிபோதையில் தன்னுடைய இரண்டாவது கணவர், தன்னையும் தன்னுடைய மகளையும் அடித்து துன்புறுத்துவதாக பிரபல நடிகை ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து கணவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இவர், நாகினி உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர். சக நடிகரான ராஜா சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாலக் என்ற மகள் உள்ளார். ஒன்பது ஆண்டுகள் இவர்களுடைய திருமண வாழ்க்கை சிக்கலில்லாமல் சென்றது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் விவகாரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டனர்.

இதையடுத்து, கடந்த 2013ல், நடிகை ஸ்வேதா, இன்னொரு நடிகர் அபினவ் கோலியை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், மும்பை காந்திவிலி காவல் நிலையத்தில், நடிகர் அபினவ் கோலி மீது ஸ்வேதா புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில், என்னுடைய இரண்டாவது கணவர் நடிகர் அபினவ் கோலி, தினமும் மது போதையில் வீட்டுக்கு வந்து என்னையும், என்னுடைய மகளையும் அடிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் கூறியிருக்கிறார்.

அந்தப் புகாரை விசாரித்த போலீசார், அபினவ் கோலியை கைது செய்திருக்கின்றனர்.

மூலக்கதை