விஜய்சேதுபதிக்கு ஷாருக்கான் புகழாரம்

தினமலர்  தினமலர்
விஜய்சேதுபதிக்கு ஷாருக்கான் புகழாரம்

சமீபத்தில் மெல்போர்னில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட விஜய்சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. பாலிவுட் உள்ளிட்ட திரையுலகிலிருந்து பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், நடிகர் ஷாருக்கான் இந்த நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்த திரைப்பட விழா குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றபோது விஜய் சேதுபதியின் நடிப்பை பற்றி வெகுவாக புகழ்ந்த ஷாருக்கான், தான் இதுநாள் வரையிலான தனது வாழ்நாளில் பார்த்த மிகச்சிறந்த நடிகர் விஜய்சேதுபதி என்று தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

கடந்த ஒரு வருட காலமாக இந்தி படத்தில் நடிப்பது, ஹிந்தியில் தனது படம் ரீமேக் ஆவது, ஹிந்தி நடிகர்களுடன் இணைந்து நடிப்பது என விஜய்சேதுபதி பாலிவுட் பிரபலங்களையும் கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை