அக்க்ஷய் குமாரை கீழே தள்ளிய சோனாக்சி சின்ஹா

தினமலர்  தினமலர்
அக்க்ஷய் குமாரை கீழே தள்ளிய சோனாக்சி சின்ஹா

சில நேரங்களில் நடிகைகள் சிலர், தங்களது சக நடிகர்களிடம் ரொம்பவே உரிமை எடுத்துக் கொண்டு அவர்களை சங்கடப்பட செய்துவிடுவார்கள் அப்படித்தான் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, பிராங்க் செய்கிறேன் என நினைத்து கொண்டு, அக்ஷய் அமர்ந்து இருந்த நாற்காலியில் இருந்து அவரை கீழே விழச் செய்து உள்ளார்

அக்க்ஷய் குமார் தான் நடித்துள்ள மிஷன் மங்கள் என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஒரு டிவி நிகழ்ச்சிக்காக அக்க்ஷய் குமாரும் படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள வித்யாபாலன், நித்யாமேனன், சோனாக்ஷி சின்கா, டாப்சி உள்ளிட்ட அனைவரும் வட்டமாக நாற்காலிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சற்று ரிலாக்ஸ் செய்வதற்காக தன் கைகளை மேலே தூக்கி சோம்பல் முறிக்க முயன்றார் அக்க்ஷய் குமார்.

சரியாக அந்த நேரம் அவரது அருகில் அமர்ந்திருந்த சோனாக்ஷி சின்ஹா தனது இடது கையால் அக்சயின் நெஞ்சுப்பகுதியில் கை வைத்து தள்ளுவது போல சற்றே வேகமாக அடிக்கிறார். இதை எதிர்பாராத அக்க்ஷய்குமார் நிலைகுலைந்து நாற்காலியில் இருந்து பின்பக்கமாக மல்லாந்து கீழே விழுந்தார். இதனால் சில நொடிகள் அக்க்ஷய் குமாரும் அருகில் இருந்த சக நடிகைகளும் அதிர்ச்சி அடைந்தாலும் சோனாக்ஷி சின்ஹா மட்டும் பயங்கரமாக சிரிக்க ஆரம்பித்தார்.. இதை தொடர்ந்து அக்க்ஷய் குமாரும், அதை ஒரு ஜாலியான வேடிக்கையாக எடுத்துக் கொண்டு தன் பங்கிற்கு சிரித்து சூழ்நிலையை எளிதாக்கினார்.

மூலக்கதை