திருமணம் செய்ய மாட்டேன்: வரலட்சுமி

தினமலர்  தினமலர்
திருமணம் செய்ய மாட்டேன்: வரலட்சுமி

விமல், வரலட்சுமி நடித்துள்ள படம் 'கன்னி ராசி'. பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு நடித்துள்ளனர். முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வரலட்சுமி பேசுகையில், 'புது இயக்குநர்களுடன் பணியாற்ற பிடிக்கும். கன்னி ராசி கதையை படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன்.

காதல் திருமணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நிஜ வாழ்க்கையில் திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன். குடும்பங்கள் கொண்டாடும் ஜாலியான படமாக இருக்கும் என்றார்.

மூலக்கதை