2022-ம் ஆண்டு பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் டி.20 கிரிக்கெட் போட்டி

தினகரன்  தினகரன்
2022ம் ஆண்டு பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் டி.20 கிரிக்கெட் போட்டி

பர்மிங்ஹாம்: 2022ல் இங்கிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் டி.20 கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. பர்மிங்காவில் நடைபெறும் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. 1930-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் கேம்ஸ் என்ற மிகப்பெரிய விளையாட்டுத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2010-ம் ஆண்டு இந்தியா முதன்முறையாக இந்த தொடரை நடத்தியது. 2014-ல் ஸ்காட்லாந்து தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. காமன்வெல்த் போட்டியை நடத்தும் வாய்ப்பு இப்போது தான் முதன் முறையாக தென்ஆப்பிரிக்காவுக்கு கிடைத்திருந்தது. தென்ஆப்பிரிக்காவின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் நிதி பிரச்னையால் டர்பனில் போட்டியை நடத்த இயலாது என்று கூறியது. இதனால் புதிதாக விண்ணப்பம் கோரப்பட்டது. இதில் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகர் போட்டியை நடத்த முன்வந்தது. இதற்கு காமன்வெல்த் கேம்ஸ் பெடரேசன் அனுமதி அளித்தது. ஒரு நாட்டில் விளையாட்டு நடத்தப்படும்போது அந்த நாடு 7 போட்டிகளை சேர்க்க பரிந்துரை செய்யலாம். இந்நிலையில் ஐ.சி.சி. மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடத்த முயற்சிகள் மேற்கொண்டன. அந்த முயற்சிக்கு பலனாக 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பர்மிங்காவில் நடைபெறும் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

மூலக்கதை