கட்சிகளுக்கு பாக். அமைச்சர் அழைப்பு

தினமலர்  தினமலர்
கட்சிகளுக்கு பாக். அமைச்சர் அழைப்பு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத்தில் நேற்று நடந்த பக்ரீத் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக். வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி "ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன். நாளை நடைபெறும் சுதந்திர தினத்தில் காஷ்மீர் மக்களுக்காக ஒன்றாக குரல் கொடுப்போம். வரும் 15ல் இந்திய சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக இங்கு அனுசரிப்போம்" என்றார்.

மூலக்கதை