ரோஜர்ஸ் கோப்பை: நடால், பியான்கா சாம்பியன்

தினகரன்  தினகரன்
ரோஜர்ஸ் கோப்பை: நடால், பியான்கா சாம்பியன்

கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம்  வென்றார். மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவுடன் மோதிய அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் முதல் செட்டில் 1-3 என பின்தங்கிய நிலையில் காயம் காரணமாக விலகினார். இதனால்  பியான்கா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். நடால், பியான்கா இருவரும் ரோஜர்ஸ் கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர். கடைசி படம்: காயம் காரணமாக விலக நேரிட்டதால் செரீனா கண்ணீர் வடிக்கிறார்.

மூலக்கதை