கோப்பை வென்றது இளம் இந்தியா | ஆகஸ்ட் 12, 2019

தினமலர்  தினமலர்
கோப்பை வென்றது இளம் இந்தியா | ஆகஸ்ட் 12, 2019

ஹோவ்: முத்தரப்பு ஒருநாள் தொடரின் (19 வயது) பைனலில் அசத்திய இளம் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பை வென்றது.

இங்கிலாந்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இதில் இங்கிலாந்து, இந்தியா,வங்கதேசம் அணிகள் பங்கேற்றன. இதன் பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த வங்கதேச அணிக்கு மஹ்மதுல் ஹசன் ஜாய் (109), பர்வேஸ் ஹொசைன் இமான் (60) கைகொடுக்க, 50 ஓவரில், 261 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு திவ்யான்ஸ் சக்சேனா (55), யாஷவி ஜெய்ஸ்வால் (50), கேப்டன் பிரியம் கார்க் (73) ‘டாப்–ஆர்டரில்’ நம்பிக்கை அளித்தனர். பொறுப்பாக ஆடிய துருவ் ஜுரெல், தன்பங்கிற்கு அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார்.

இந்திய அணி 48.4 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 264 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜுரெல் (59), திலக் வர்மா (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை