கோட்டைவிட்ட கெய்ல் அணி! *‘சூப்பர் ஓவரில்’ ஏமாற்றம் | ஆகஸ்ட் 12, 2019

தினமலர்  தினமலர்
கோட்டைவிட்ட கெய்ல் அணி! *‘சூப்பர் ஓவரில்’ ஏமாற்றம் | ஆகஸ்ட் 12, 2019

பிராம்ப்டன்: கனடா ‘டுவென்டி–20’ லீக் தொடர் பைனல் ‘டை’ ஆக, சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற வின்னிபெக் ஹாக்ஸ் அணி சாம்பியன் கோப்பை வென்றது.

கனடாவில் குளோபல் ‘டுவென்டி–20’ தொடர் நடந்தது. பைனலில் வின்னிபெக் ஹாக்ஸ், வான்கூவர் நைட்ஸ் அணிகள் மோதின. இந்திய தொடரில் விளையாட சென்றதால் கெய்லுக்குப் பதில் கேப்டனாக செயல்பட்ட சோயப் மாலிக், ‘டாஸ்’ வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

முதலில் விளையாடிய ஹாக்ஸ் அணி 20 ஓவரில் 192/8 ரன்கள் குவித்தது. கடின இலக்கைத் துரத்திய வான்கூவர் அணியின் வெற்றிக்கு சோயப் மாலிக் 64 ரன்கள் எடுத்து உதவினார்.

கடைசி ஓவரில் வான்கூவர் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டன. ரசல் 2 சிக்சர் அடித்தார். கடைசி பந்தில் 3 ரன் தேவை என்ற நிலையில் ஜாபர் (27), 2 ரன் எடுத்து அவுட்டாக, வான்கூவர் அணி 20 ஓவரில் 192/6 ரன் எடுத்தது. போட்டி ‘டை’ ஆனது. ரசல் 20 பந்தில் 46 ரன்கள் விளாசினார்.

வெற்றியாளரை முடிவு செய்ய ‘சூப்பர் ஓவர்’ நடந்தது. வான்கூவர் அணி ஒரு ஓவரில் 9 ரன் மட்டும் எடுத்தது. 0.4 ஓவரில் வின்னிபெக் அணி 10 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற வின்னிபெக் அணி, ‘குளோபல்’ கோப்பை வென்று சாதித்தது.

மூலக்கதை