காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம்... சுமுக தீர்வே நமது நோக்கம்: ஐ.நா அமைதி தூதர் மலாலா கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம்... சுமுக தீர்வே நமது நோக்கம்: ஐ.நா அமைதி தூதர் மலாலா கருத்து

லண்டன்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில், அமைதியான முறையில் சுமுகமாகத் தீர்வு காண்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும் என்று, ஐ. நா அமைதி தூதர் மலாலா கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரும், நோபல் பரிசு பெற்றவரும், ஐ. நா. வின் அமைதிக்கான தூதருமான மலாலா, காஷ்மீர் பிரச்னை தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடந்த கலவரத்துக்குப் பிறகு இங்கிலாந்தில் வசித்துவரும் மலாலா, அங்கிருந்தபடி இந்தக் கருத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், காஷ்மீரில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள்தான் இந்த பாதிப்புகளில் அதிகம் பாதிக்கக்கூடியவர்கள். அவர்கள்தான் மோதலினால் ஏற்படும் இழப்புகளை அதிகம் சந்திக்கின்றனர்.

அவர்களின் பாதுகாப்பை நினைத்து நான் கவலைகொண்டுள்ளேன். தெற்கு ஆசியாவில் உள்ள சர்வதேச சமூக அமைப்புகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு குறித்து கருத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன்.

எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக்காகப் போராடுவது அவசியமான ஒன்று.

70 வருடப் போராட்டத்துக்கு அமைதியான முறையில் சுமுகமாகத் தீர்வு காண்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

.

மூலக்கதை