முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார்-ஆழ்ந்த இரங்கல்கள்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார்ஆழ்ந்த இரங்கல்கள்

    >>கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.   >>வலிமையான தலைவராக செயல்பட்டு அனைவரிடமும் நற்பெயர் சம்பாதித்தவர்.   >>கட்சி கடந்து பல அரசியல் தலைவர்களிடம் இவர் நெருக்கமாக பழகி இருக்கிறார்.   >>1973ல் இருந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி இருக்கிறார்.   >>ஹரியானா சட்டசபையில் 1977ல் இருந்து 1982 வரை எம்எல்ஏ வாக இருந்தார்.   >>மீண்டும் 1987 டு 1990 வரை எம்எல்ஏ வாக இருந்தார்.   >>1977ல் ஹரியானாவில் இவர் அமைச்சராக பொறுப்பேற்றார்.   >>1979ல் ஹரியானா மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றார். இத்தனை சாதனைகளையும் இவர் 27 வயதில் நிகழ்த்தினார்.   >>1978-1990 வரை கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.   >>1998ல் இருந்து டெல்லியின் முதல் பெண் முதல்வராக பொறுப்பேற்றார்.   >>அந்த பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தேசிய அரசியலுக்கு வந்தார்.   >>1990ல் இவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.   >>1998ல் இருந்து இவர் பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார்.   >>இவர் ஹரியானவை சேர்ந்தவர் என்றாலும், கர்நாடகாவில் பெல்லாரி தொகுதியில் கூட லோக்சபா தேர்தலில் நின்று இருக்கிறார்.   >>தகவல் தொடர்பு துறை, தொலைத்தொடர்பு துறையை, சுகாதாரத்துறை, குடும்பம் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.   >>இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில்தான் போபால், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், சட்டிஸ்கர்,உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தார்.   >>கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.   >>வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றியவர் சுஷ்மா சுவராஜ் ..   >>பாஸ்போர்ட் வாங்குவது மிகக்கடினம் என்ற நிலையையும், இடைத்தரகர்களை நீக்கி நடைமுறையை மிகவும் எளிமையாக்கினார்.   அனைத்து கட்சியினரும், மக்களும் போற்றும் ஒரு அரசியல் தலைவராக வாழ்ந்து விடைபெறும் திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்களின் பெருமை என்றும் நிலைத்திருக்கும்.

மூலக்கதை