ஹாலிவுட் இளம் நடிகை திடீர் மரணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹாலிவுட் இளம் நடிகை திடீர் மரணம்

நியூயார்க்: ஹாலிவுட் இளம் நடிகை டேனிகா மெகுயிகன் திடீர் மரணம் அடைந்தார். கான்ட் காப் வோன்ட் காப், தி சீக்ரெட் ஸ்கிரிப்ட்சர், வைல்டுஃபயர் போன்ற படங்களில் நடித்தவர் டேனிகா மெக்குயிகன். பிரபல குத்துச்சண்டை வீரர் பாரி மெக்குயிகன் மகள்.

டேனிகா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திடீர் மரணம் அடைந்தார்.

இதுகுறித்து டேனிகா சகோதரர் ஷானே கூறும்போது,’என்னுடைய அழகான சகோதரி டேனிகா கேன்சருடன் போராடிக்கொண்டிருந்தார்.

 நேற்று அதிகாலையில்  அவர் மரணம் அடைந்தார். அவருக்கு 33 வயதுதான் ஆகிறது.

முன்னதாக 11 வயது முதல் 13 வயது வரை டேனிகா கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது கேன்சருடன் நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்று குணம் அடைந்தார்.

எனவே மேலும் 20 ஆண்டுகள் அவர் எங்களுடன் வாழ்ந்த பாக்யம் பெற்றோம். கேன்சரை எதிர்த்து அவர் போராட்டம் முதன்முறை நடந்தபோதுவெற்றி பெற்றது.

இந்த முறையும் அவர் கேன்சருடன் துணிச்சலாக போராடினார்.

வெற்றி பெற முடியவில்லை’ என்றார்

.

மூலக்கதை