போஸ்னியா நாட்டில் இந்திய தொழிலதிபர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
போஸ்னியா நாட்டில் இந்திய தொழிலதிபர் கைது

ஹெர்ஜிவோ: மோசடி மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக, இந்திய தொழிலதிபர் பிரமோத் மிட்டல், போஸ்னியா நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த பிரபல உருக்காலை அதிபர் லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டல். இவர், போஸ்னியாவின் லுகாவாக் நகரில் நிலக்கரி தொடர்பான தொழிற்சாலை ஒன்றின் பங்குதாரராக உள்ளார்.



இந்நிலையில், மோசடி நடந்துள்ளது என்ற சந்தேகம் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பொருளாதார குற்றம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், அரசு வழக்கறிஞர் அறிவுறுத்தலின் பேரில், பிரமோத் மிட்டல் மற்றும் அந்த தொழிற்சாலையின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச்சார்யா மற்றும் நிர்வாகி ஒருவர் என மூன்று பேரை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 45 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இவர் போஸ்னியாவில் நடத்தும் நிலக்கரி தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை