கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம்: இதுவரை அரசின் வாகனத்தை கூட பயன்படுத்தவில்லை...முதல்வர் குமாரசாமி உருக்கம்

தினகரன்  தினகரன்
கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம்: இதுவரை அரசின் வாகனத்தை கூட பயன்படுத்தவில்லை...முதல்வர் குமாரசாமி உருக்கம்

பெங்களூரு: எனது ஆட்சியில் பங்குகொண்டு கடுமையாக உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் தலை தாழ்ந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முதல்வர் குமாரசாமி உருக்கமாக பேசியுள்ளார். கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டபேரவையில் தாக்கல் செய்தார். தீர்மானத்தின் மீது ஒரு மணி நேரம் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, எம்எல்ஏகளுக்கு சட்டமன்ற கட்சி  தலைவர்கள் பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறக்கும் அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாயிண்ட் ஆப் ஆர்டரை காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர்  சித்தராமையா கொண்டு வந்ததால், அன்று நாள் முழுவதும் அவையில் அப்பிரச்னை தொடர்பான விவாதம் நடந்தால் நம்பிக்கைகோரும் தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடக்கவில்லை.மறுநாள் 19ம் தேதி அவை கூடியதும் கொறடா உத்தரவு விவாதம் தொடர்ந்தது. அதே நாளில் நம்பிக்கைகோரும் தீர்மானத்தின் மீது பகல் 1.30 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் குமாராமிக்கு ஆளுநர் வி.ஆர்.வாலா கடிதம்  அனுப்பியதை அஸ்த்திரமாக பயன்படுத்தி கொண்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள், நாள் முழுவதும் அவை நடவடிக்கையில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? என்ற விவாதத்தை கையில் எடுத்தனர். அதன் காரணமாக நாள் முழுவதும்  அவையில் நம்பிக்கைகோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கவில்லை. இரவு 8 மணிக்கு எதிர்கட்சி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆளும் கட்சி மறுத்தனர். இருதரப்பு வாதம், விவாதம் கேட்ட பின், 22ம் தேதி  தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்துவதாக உறுதியளித்து அவையை ஒத்தி வைத்தார்.அதன்படி நேற்று காலை அவை கூடுவதற்கு முன்பே முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-மஜத எம்எல்ஏகள் சபாநாயகரை சந்தித்து நம்பிக்கைகோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடத்த மேலும் இரண்டு நாட்கள் அவகாசம்  கொடுக்க வேண்டும், வாக்கெடுப்பு புதன்கிழமை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் முதல்வரின் கோரிக்கையை ஏற்காத சபாநாயகர் திட்டமிட்டப்படி மாலைக்கும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று உறுதியாக  தெரிவித்தார். பகல் 12.10 மணிக்கு அவை கூடியதும் வாக்கெடுப்பு நாட்களை விஸ்தரிக்க வேண்டும் என்று ஆளும் கட்சி தரப்பில் வற்புறுத்தினர். இதற்கு பாஜவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நள்ளிரவு 11.40 வரை இரு தரப்பினருக்கும் கடும்  வாக்குவாதம் நடந்தது. சட்டபேரவையில் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட கடும் அமளிக்கு இடையில் அவையை இன்று ஒத்தி வைப்பதாக கூறிய சபாநாயகர் ரமேஷ்குமார், காலை 10 மணி முதல் 4 மணி வரை நம்பிக்கைகோரும்  தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டும். 4 முதல் 5 மணி வரை விவாத்திற்கு பதிலளித்து முதல்வர் குமாரசாமி பேச வேண்டும். 5 மணி முதல் 6 மணிக்கும் வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்று கடுமையான நிபந்தனையுடன்  அவையை ஒத்தி வைத்தார். இதற்கிடையே, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முதல்வர் குமாரசாமி உருக்கமாக பேசி வருகிறார். அப்போது, கர்நாடகாவின் 6 கோடி மக்களிடமும் மன்னிப்புக்கேட்டு கொள்கிறேன் என்றார். நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ்  தலைவர்களுக்கு நன்றி. நான் வாழ்கையில் பல தவறுகளை செய்துள்ளேன், நல்ல விஷயங்கள் பல செய்துள்ளேன் என்றார். காலத்தின் கட்டாயத்தால் நான் அரசியலில் நுழைந்தேன், அதே கட்டாயத்தின்பேரில் எனது மனைவியும் சட்டமன்ற  உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது என் முன்பு அமர்ந்துள்ளார் என்றார். நான் என்றும் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டது கிடையாது, நான் திருமணம் செய்தபோது எனது மனைவி என்னிடம் வாங்கிய முதல் சத்தியம்  அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது தான் என்றார். நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலைவிட்டு விலக வேண்டும் என முடிவு செய்தேன், ஆனால் குலாம் நபி ஆசாத் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த முடிவை கைவிட்டேன் என்றார். நான் வாக்கெடுப்புக்கு தயாராக உள்ளேன். தங்களுக்கு  வாக்களித்த மக்களை அரசு புறக்கணிக்கவில்லை என்றார். இதுவரை நான் அரசின் வாகனத்தை கூட பயன்படுத்தவில்லை. என் மீதான புகாருக்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள், பதில் அளிக்கிறேன். நான் ஜோதிடத்தை கேட்டுக்கொண்டு  வேலை செய்பவன் அல்ல. ஆனால் மந்திரத்தை கொண்டு ஆட்சி புரிந்து வருவதாக எதிரிக்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறேன் என்றார். நாங்கள் தள்ளுபடி செய்த  அனைத்து கடன்களின் விவரம் அரசின் வலைதளத்தில் உள்ளது. தனியார் வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க ரூ.1700 கோடி ஒதுக்கியுள்ளோம் என்றார்.

மூலக்கதை