இந்திய அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனா?

தினமலர்  தினமலர்
இந்திய அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனா?

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கு இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்தனா பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.


இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக கடந்த 2017 முதல் ரவி சாஸ்திரி உள்ளார். இரண்டு ஆண்டு கால பதவி, உலக கோப்பை தொடருடன் முடிந்தது. இருப்பினும் விண்டீஸ் தொடர் வரை நீட்டிக்கப்பட்டது. அதேநேரம் புதிய தலைமை, பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் என 7 பேருக்கு தேர்வும் நடக்கிறது.


ரவி சாஸ்திரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டது. இதனால் மீண்டும் இவர் தானா என நினைத்த நிலையில், இலங்கை அணி முன்னாள் கேப்டன் ஜெயவர்தனா 42, இந்திய அணி பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஐ.பி.எல்., தொடரில் ஜெயவர்தனா மும்பை அணி பயிற்சியாளராக உள்ளார். இவர் வந்த பிறகு தான் மும்பை அணி மூன்று முறை சாம்பியன் ஆனது. இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராவும் செயல்பட்டுள்ளார்.


இதேபோல 2011ல் இந்தியாவுக்கு உலக கோப்பை வெல்ல கைகொடுத்த தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன், ஆஸ்திரேலியாவின் டாம் மூடியும் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளனராம். இதற்காகத் தான் சமீபத்தில் ஐதராபாத் பயிற்சியாளர் பதவியில் இருந்து டாம் மூடி விலகியதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை