இது கர்நாடகாவில் கறுப்புநாள்.. அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்க : நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சித்தராமையா பேச்சு

தினகரன்  தினகரன்
இது கர்நாடகாவில் கறுப்புநாள்.. அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்க : நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சித்தராமையா பேச்சு

பெங்களூரு : கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் மாலை 6 மணிக்கு  நடைபெறும் என சித்தராமையா உறுதி அளித்துள்ளார். சட்டப்பேரவையில்  நம்பிக்கை வாக்குத் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் சித்தராமையா உரையாற்றினார். கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழும் ஆபத்துகர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மத சார்பற்ற ஜனதா தளம் - காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு ஆளும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது; ஆட்சி கவிழும் ஆபத்து உருவாகியுள்ளது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி 18ல் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார். கர்நாடக சட்டபேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை இன்று  மாலை  6 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சபாநாயகர் கெடு விதித்துள்ளார். அதே சமயத்தில் கட்சி தாவல் தடை சட்டத்தில் 15 எம்எல்ஏகள் பதவி பறிக்ககோரி காங்கிரஸ் மற்றும் மஜத சார்பில் கொடுத்துள்ள புகார் மீதும் சபாநாயகர் இன்று நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சித்தராமையா பேச்சு இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு மீண்டும்  சட்டப்பேரவை கூடியது. காலை முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய விவாதம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் சித்தராமையா உரையாற்றியதை குறிப்புகளாக காண்போம். *தமிழகத்தில் 18 எம்.எல்,ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமிக்கு தந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர்.*இதுகுறித்த முடிவை 18 எம்.எல்,ஏ.க்கள், ஆளுநரிடம் கடிதம் வாயிலாக தெரிவித்தனர்.*அப்போது கொறடா உத்தரவு கூட இல்லாத நிலையில் சபாநாயகர் அவர்களை தகுதிநீக்கம் செய்தார்.*தமிழக சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. *இந்நிலையில் நீதிமன்றம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வர எவ்வாறு விலக்கு கொடுக்க முடியும்.*ஒருவர் ராஜினாமா செய்யும் போது முழு மனதுடன் திறந்த புத்தகமாக ராஜினாமா கடிதம் தர வேண்டும்.*ராஜினாமாவுக்கு முன் குதிரை பேரம் நடந்தது உறுதி எனில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு. *தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை சபாநாயகர் காப்பாற்ற வேண்டும். *கர்நாடகாவில் பாஜக தற்போது செய்து வரும் செயல் குணப்படுத்த முடியாத ஒரு வியாதி. *இந்த வியாதியை கண்டுகொள்ளாவிட்டால் எந்த மாநிலத்திலும் எந்த அரசும் ஆட்சி செய்ய முடியாது.*ஆட்சி மாற்றம் கொண்டு வர மொத்த வியாபாரம் செய்தால் போதும் என்பதை கர்நாடக மக்கள் ஏற்கமாட்டார்கள்.* பணம் மற்றும் அமைச்சர் பதவி ஆசை காட்டி எம்.எல்.ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்குவதை தடுக்க வேண்டும்.*அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் கண்டிப்பாக தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும். *எடியூரப்பா ஆட்சியில் கடந்த முறை உங்கள் முதுகில் குத்தியவர்கள் இப்பொது உங்கள் அருகில் உள்ளனர். *பின்வாசல் வழியாக வரும் எந்த அரசையும் அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது. இது கர்நாடகாவில் கறுப்புநாள்.

மூலக்கதை