புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூர், அரியானா அணிகள் வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூர், அரியானா அணிகள் வெற்றி

ஐதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போல, கபடிக்கு என்று ஒவ்வொரு ஆண்டும் புரோ கபடி லீக் நடத்தப்படுகிறது. 7வது சீசன் புரோ கபடி 2019 தொடர் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது.

ேநற்றைய புரோ கபடி தொடரில் புனேரி பல்தான் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும் மோதின. அரியானா ஸ்டீலர்ஸ் அணி 34 - 24 புள்ளிகள் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது.

அந்த அணியின் வீரர் நவீன் குமார் ஒட்டுமொத்தமாக 14 புள்ளிகளை  சேர்த்தார். விகாஸ் காலே, பர்வீன் ஆகியோர் தற்காப்பில் அரணாக செயல்பட்டு  வெற்றியை தேடித்தந்தனர்.

முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 42-23 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது.

ஜெய்ப்பூர் அணி தொடக்கம் முதலே ரைட், டிபன்ஸ் என அனைத்து அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி முடிவிலேயே 22-9 என அபார முன்னிலை பெற்றது ஜெய்பூர்.

அந்த அணி வீரர்கள் தீபக் ஹூடா சூப்பர் 10, தீபக் நர்வால் 6, நிதின் ராவல் 7 புள்ளிகளை சேர்த்தனர். அமித் ஹூடா தற்காப்பில் சிறப்பாக செயல்பட்டார்.

யு மும்பா அணியின் தற்காப்பு அரண் முற்றிலும் நிலைகுலைந்து போனதால், ஜெய்ப்பூர் வீரர்கள் எளிதாக புள்ளிகளை குவித்தனர்.

டோங் லியோன் லீ, அபிஷேக் சிங் இருவர் மட்டுமே மும்பா அணியை மீட்க போராடினர்.

.

மூலக்கதை