ஏராளமான வெற்றிகளை தேடி தந்த மலிங்காவின் கடைசி பவுலிங் இலங்கையில்...: 26ம் தேதி வங்கதேச அணியுடன் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஏராளமான வெற்றிகளை தேடி தந்த மலிங்காவின் கடைசி பவுலிங் இலங்கையில்...: 26ம் தேதி வங்கதேச அணியுடன் மோதல்

கொழும்பு: இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, இலங்கை அணிக்கு ஏராளமான வெற்றிகளை தேடித் தந்துள்ளார். உலக கோப்பை தொடரில் இலங்கை அணி சோபிக்காததால் லீக் சுற்றோடு வெளியேறியது.

இதனால் மலிங்கா, உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

ஆனால், இந்த போட்டியில் மலிங்கா பங்கேற்கமாட்டார் என்ற தகவலும் கடந்த சிலநாட்களாக வெளியாகின. ஆனால், முதல் ஒருநாள் போட்டி இலங்கையை பிரேமதாசா மைதானத்தில் வருகிற 26ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த போட்டியோடு மலிங்கா ஓய்வு பெற உள்ளதாக, இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருணாரத்னே கூறுகையில், ‘‘வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் மலிங்கா விளையாடுவார்; அதன் பின் ஓய்வு பெறுகிறார்.

இந்த தகவலை மலிங்கா என்னிடம் தெரிவித்தார். ஆனால் தேர்வுக்குழுவிடம் அவர் என்ன கூறினார் என்று எனக்கு தெரியாது.

என்னிடம் கூறியது ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுவார்’’ என்றார். இவர் உலககோப் பையில் 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 ஓவர் வீசி 43 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

உலக கோப்பை தொடரில் மலிங்கா 16வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை