எல்லையில் பாக். மீண்டும் அத்துமீறல்

தினகரன்  தினகரன்
எல்லையில் பாக். மீண்டும் அத்துமீறல்

ஜம்மு: காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் பலியானார்.  காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் கடந்த சனியன்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். அப்போது பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தார் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பல்னாய் கிராமத்தை சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில் ரஜோரி மாவட்டத்தில் சுந்தர்பானி எல்லைக் கட்டுப்பாடு கோடு பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அருகே உள்ள கிராமங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மார்டர் ரக குண்டுகள், சிறிய ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காலை 6.30மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் பல மணி நேரங்கள் நீடித்தது. இதற்கு இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதில் தாக்குதல் நடத்தினார்கள். பாகிஸ்தான் தாக்குதலில் வீரர் ஒருவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 3 நாளில் 2வது முறையாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

மூலக்கதை