மலிங்கா எப்போ ஓய்வு | ஜூலை 22, 2019

தினமலர்  தினமலர்
மலிங்கா எப்போ ஓய்வு | ஜூலை 22, 2019

 கொழும்பு: வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மலிங்கா.

இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 36. இவரது வித்தியாசமான ஆக் ஷனுடன் கூடிய ‘யார்க்கர்’ எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு ‘கிலி’ ஏற்படுத்தும். 30 டெஸ்டில் 101 விக்., 225 ஒருநாள் போட்டிகளில் 335, 73 ‘டுவென்டி–20’ போட்டிகளில் 97 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

முரளிதரன் (523), சமிந்தா வாசிற்குப் (399) பின் ஒருநாள் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இலங்கை பவுலர் இவர். 

உலக கோப்பை அரங்கில் இரு முறை ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். 2010ல் டெஸ்ட் அரங்கில் விடைபெற்ற மலிங்கா, சமீபத்தில் முடிந்த உலக கோப்பை தொடருடன் விடைபெறுவார் என நம்பப்பட்டது. 

தற்போது சொந்தமண்ணில் விடைபெறவுள்ளார். வரும் 26ம் தேதி கொழும்பில் நடக்கும் வங்கதேச அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு ‘குட் பை’ சொல்கிறார். இதை கேப்டன் கருணாரத்னே உறுதி செய்தார். 

மூலக்கதை