சந்திரயான் ‘சக்சஸ்’: கோஹ்லி பாராட்டு | ஜூலை 22, 2019

தினமலர்  தினமலர்
சந்திரயான் ‘சக்சஸ்’: கோஹ்லி பாராட்டு | ஜூலை 22, 2019

 புதுடில்லி: சந்திரயான் 2 விண்கலம் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர்.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்ய சந்திரயான் 2 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி பாராட்டு தெரிவித்து ‘டுவிட்டர்’ செய்தி வெளியிட்டார்.

இதில்,‘ சந்திரயான் 2 நேற்று செலுத்தப்பட்டது, வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தால், இந்திய தேசம் பெருமைப்படுகிறது, ஜெய்ஹிந்த்,’ என தெரிவித்துள்ளார்.

சச்சின் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘இஸ்ரோ அணிக்கு பாராட்டுக்கள். சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது மற்றொரு சிறந்த மைல்கல்லாக அமைந்துள்ளது,’ என தெரிவித்தார்.

காம்பிர் கூறுகையில்,‘‘சிறுவயதில் நிலவினை பார்க்கும் போதெல்லாம் வியப்படைவேன், இங்கு என்ன ரகசியம் புதைந்துள்ளது என யோசிப்பேன். தற்போது சந்திரயான் 2 செலுத்தப்பட்டதால், இதுபோன்ற பல்வேறு ரகசியங்கள் வெளியே வரலாம். இது அடுத்த தலைமுறையினரின் விண்வெளி திட்டத்துக்கு பெரிய உதவியாக அமையும், இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்,’’ என்றார்.

இதுபோல சேவக், ரெய்னா, ஹர்பஜன் சிங், புஜாரா, ஷிகர் தவான், காம்ப்ளி, ராகுல் சர்மா, முகமது கைப் என, பல கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

மூலக்கதை